ஈழமும் அதன் வரலாறும்

Tuesday, November 4, 2008

ஈழத் த‌மிழ‌ர் வரலாற்றுப் பாடம்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ளை ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் பல‌ர் நினை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌பிழை‌க்க‌ப் போன இட‌த்‌தி‌ல் அமை‌தியாக‌ப் ‌பிழை‌க்க வே‌ண்டியதுதானே, த‌னி நாடு கே‌ட்டு ஏ‌ன் போராட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கே‌ட்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த எ‌‌ண்ண‌ம் தவறு. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை‌ப் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ‌நினை‌‌த்தா‌ல் அது ‌மிக‌ப்பெ‌ரிய வரலா‌ற்று‌ப் ‌பிழை. த‌மிழ‌ர்க‌ள் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் அ‌ல்ல. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள்.

இ‌ன்னு‌ம் சொ‌ல்ல‌ப்போனா‌ல் ‌சி‌ங்கள‌ர்க‌‌‌ளி‌ன் வரலா‌‌ற்‌றி‌ல், தா‌ங்க‌ள் பட‌கி‌ல் வ‌ந்து இல‌ங்கை‌யி‌ல் இற‌ங்‌கியபோது அ‌ங்கு வ‌சி‌த்து வ‌ந்த த‌மிழ‌ர்க‌ள் த‌ங்களை வரவே‌ற்றதாக அவ‌ர்களே கூறு‌கிறா‌ர்க‌ள். இத‌ன்மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள்தா‌ன் இல‌ங்கை‌யி‌ல் பூ‌ர்‌வீக‌க் குடிக‌ள், தா‌ங்க‌ள்தா‌ன் அயலவ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர்களே ஒ‌த்து‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள் இல‌ங்கை‌க்கு வருகையில் இருந்தது இரு அரசாட்ச்சி தமிழர் தமிழ் மன்னரினால் மற்றும் சிங்களவர் சிங்கள மன்னரினால் அரசாலபட்டனர். மற்றும் அவர்களுக்கு உறுதுனையாக தமிழக அரசர்கள் இருந்தனர். (சொல மன்னர்கள் மற்றும் (ராஜராஜ சொலன்) பாண்டிய மன்னர்கள் இன்னும் பலர்)


இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்துகொ‌ண்டிரு‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். அதுவு‌ம் தவறு. இல‌ங்கை‌யி‌ல் போராடுபவ‌ர்க‌ள் வ‌ன்முறை‌க் கு‌ம்ப‌ல் அ‌ல்ல. அ‌ங்கு நட‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் அ‌ல்ல. அது ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம். த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை‌ப் போரா‌ட்ட‌ம்.

பால‌ஸ்‌தீன‌த்‌தி‌ல் யாச‌ர் அராப‌த், தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் நெ‌ல்ச‌ன் ம‌ண்டேலா, ‌கியூபா‌வி‌ல் ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோ ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் நட‌ந்து‌‌ள்ள ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்டமு‌ம் ஒரு ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம்தான்.
இல‌ங்கை‌யி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்களை நா‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிக‌‌ள். இல‌ங்கை‌யிலு‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் வா‌ழ்‌கிறா‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் மலையக‌த்‌தி‌ல் வா‌‌ழ்‌கிறா‌ர்க‌ள். சமதள‌த்‌தி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ள் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள். அ‌ந்த ம‌ண்ணோடு தோ‌ன்‌றியவ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளை இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்.

இ‌ந்‌தியாவை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள் ஆ‌ண்டபோது இல‌ங்கையு‌ம் அவ‌ர்க‌ள் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்தது. நெ‌ல்லையுட‌ன் இணை‌‌த்து இல‌ங்கையையு‌ம் அவ‌ர்க‌ள் ஆ‌ட்‌சி செ‌ய்தன‌ர். ஆனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு 1947இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கிய ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள், இல‌ங்கை‌க்கு 1948இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கின‌ர். இ‌வ்வாறு ‌பி‌‌ரி‌த்து‌ச் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கியத‌ன் மூல‌ம் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அவ‌ர்க‌ள் காரணமா‌கி‌வி‌ட்டன‌ர்.


இல‌ங்கை‌க்கு ‌சீனா ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது அ‌ங்கு வாழு‌ம் பெள‌த்த மத‌த்‌தினரு‌க்கு ஆதரவாக‌க் கொடு‌க்‌கிறது. பா‌கி‌ஸ்தா‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது இல‌ங்கை‌‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌தியா தலை‌யிட‌க் கூடாது எ‌ன்பத‌ற்காக‌க் கொடு‌க்‌கிறது. இ‌ந்‌தியா ஏ‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறது?

அ‌‌ப்படியானா‌ல் இ‌ல‌ங்கை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் த‌மிழ‌‌ர்க‌ளை‌விட ‌சி‌ங்கள‌ர்க‌ள்தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ற்கு மு‌க்‌கியமாக‌ப்படு‌கிறது. அதனா‌ல்தா‌ன் ராடா‌ர், ‌பீர‌ங்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ய‌ங்கர அயுத‌ங்களை இல‌ங்கை‌க்கு இ‌ந்‌தியா கொடு‌த்து உதவு‌கிறது. இதனா‌ல் த‌மிழ‌ர்க‌‌ள் ‌மீதான தா‌க்குத‌ல்களு‌க்கு துணை போ‌கிறது. இதனை நா‌ம் க‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ல‌ங்கை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் புத்தமததினர் மட்டுமெ முதல் மந்திரி அல்லது ஜனாதிபதி ஆக முடியும் இதில் இருந்து விழங்க முடியும் எவ்வளவு சிறப்பாட்ச்சி நடைபெறுகிறது என்று

கல்வியில் தரப்படுத்தல் முறை

பதியுதீன் மகமூட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இரண்டு நானமைகள் இருந்தன. ஒன்று தமிழர்கள் உயர் கல்விக்குப் பெருவாரியாகத் தெரிவு செய்யப்படுவதைத் தடுத்து மற்றைய மக்கள் அவர்களின் இடங்களைப் பெறச் செய்வது. மற்றையது ஒரு முஸ்லிம் அமைச்சர் ஊடாக இந்த நாடகத்தை நடாத்தி முஸ்லிம்களுக்கு நன்மை செய்வது போல் காட்டி தமிழர்- முஸ்லிம்கள் ஒற்றுமையைக் குலைப்பது. இரண்டிலும் அரசாங்கம் வெற்றி கண்டது. இலங்கைப் பல்கலைக்கழகத் தேர்வில் முக்கியமாக, விஞ்ஞான பீடங்களுக்கான தேர்வில் கூடியளவு தமிழ் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது ஒரு பிரச்சினையாக தேசிய அரசியல் மட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதாவது கொழும்பு மாவட்ட மாணவ மாணவியருக்கும் யாழ். மாவட்ட மாணவ மாணவியருக்கும் கூடிய கல்வி வசதிகள் இருந்தன என்றும் பின்தங்கிய மற்றைய மாவட்ட மாணவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்றும் இதனால் கூடிய தமிழ் மாணவர்களுக்கே கல்வி வசதி கிடைத்து வருவதாகவும் அது மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பதாகவும் பெரிதாக அரசாங்கத் தரப்பில் எடுத்தியம்பப்பட்டது. ஆனால், உண்மையில் 1948- 1956 வரையிலான காலகட்டத்தில் ஆங்கில மொழியாட்சி இருந்து வந்தபோது, எந்த இன மக்கள் எந்தத் துறையில் போட்டி போட்டாலும் கொழும்பில் தமிழ் மாணவ மாணவிகளே மற்றவர்களை விட அவற்றில் சிறப்பாகச் செய்து வந்தனர். பொது மொழியான ஆங்கிலம் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஆட்சி மொழியாக இருந்தபோது தமிழர்கள் தகைமையின் நிமித்தமே தலை நிமிர்ந்து தரமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது இதிலிருந்து புலப்படுகிறது. ஆகவே, தமிழர்களுக்குக் கல்வி மீதிருந்த பற்றையும் திறமையையும் குறைக்கவே நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டன என்று கொள்ளலாம். "சிங்களம் மட்டும்" கொண்டு வந்தால் தமிழர்களால் வேற்று மொழியில் அம்மொழி மாணவ மாணவியருடன் போட்டிபோட முடியாதிருக்கும் என்று பெரும்பான்மையினர் கணித்தனர். அதனால் "24 மணித்தியாலங்களில் சிங்களம்" என்று கூறி சட்டத்தையும் இயற்றினர்.
ஆனால், தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியிலேயே கற்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது. ஆனாலும், தமிழ் மொழியில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு அரசாங்க அலுவலகங்களில் வேலை கிடைப்பது அரிதாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், வட மாகாணத் தமிழ் பேசும் மாணவ மாணவியர் அவர்களின் பாரம்பரிய அறிவியல் சிரத்தையின் பொருட்டு தொடர்ந்து உயர்கல்வியில் பிரகாசித்து வந்தனர். சட்டப்படி சிங்களத் தேர்ச்சியும் பெறத் தொடங்கினர். இதன் பொருட்டு முளையில் கிள்ளி எறியும் நடவடிக்கையாகவே தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிமாவட்ட மாணவர்களுக்குக் கல்வி வசதிகள் குறைவென்று கூறி அதனால்தன் தரப்படுத்தல் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. வெளிமாவட்ட மாணவ மாணவியர் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்திருந்தார்களேயானால் அம்மாவட்டக் கல்லூரிகளுக்குச் சிறந்த ஆசிரியர்களை அனுப்பி உபகரணங்களை வழங்கி அக்கல்லூரி மாணவ மாணவியரின் தரத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் அல்லது புலமைப்பரிசில்களை அம்மாவட்ட மாணவ மாணவியருக்கு நல்கி சிறந்த கல்லூரிகளினூடு அவர்களைப் பல்கலைக்கழகம் உள்நுழைய வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கல்வித்தரம் இன்று குன்றியிருக்காது. நாடானது சிறந்த அறிவாளிகளையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் பெற்றிருக்கும். தொழிற்றுறைகளில் திறமையான உண்மையான நிபுணர்கள் பிரகாசித்திருப்பார்கள்.
அதற்குப் பதிலாகத் தமிழ் மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதித் தொகையைக் குறைப்பதற்காகத் தரப்படுத்தல் எனப்படும் இந்த முறையை அறிமுகம் செய்தது ஷ்ரீமாவோ அரசு. இந்த முறை பற்றி சுருக்கமாகக் கூறுவதாகில் ஒரு மாவட்டத்தில் பெறப்பட்ட ஆகக் கூடிய புள்ளிகள் 75 ஆகவும் இன்னொரு மாவட்டத்தில் கிடைத்த ஆகக்கூடிய புள்ளிகள் 60 ஆகவும் இருந்தால் 75 யும் 60 யும் சமநிலைப்படுத்தி 60 புள்ளிகளுக்குக் கீழ் கிடைத்த புள்ளிகளையும் விகிதாசாரப்படி மேலேற்றுவதே இந்த முறை . எனவே 75 புள்ளிகள் பெற்ற ஒரு மாவட்ட மாணவருடன் 60 புள்ளிகள் பெற்ற இன்னொரு மாவட்ட மாணவர் சமநிலைப்படுத்தப்பட்டு அவருக்கும் 75 புள்ளிகள் கிடைத்தது போல் பாசாங்கு செய்து அவரைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுப்பதே இந்தத் தரப்படுத்தல் முறை .
இதனால் 60 க்கு மேல் 75 வரையில் புள்ளிகள் பெற்ற முக்கியமாக வடமாகாண மேல்மாகாணத் தமிழ் பேசும் மாணவ, மாணவியர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பிற மாகாணங்களில் 50 புள்ளிகள் பெற்றவர் சுமார் 65- 70 புள்ளிகள் வரை பெற்றவர் போல் கணிக்கப்பட்டு பல்கலைக்கழகம் புக இந்த முறை உதவி செய்தது.
இதனால் பொதுவாகவே சகல துறைகளிலும் தரம் குறைந்தது. வட மாகாண' மேல் மாகாணத் தமிழ் மாணாக்கர்களின் உயர்கல்வி சார் உந்துசக்தி மழுங்க வைக்கப்பட்டது. "நான் எவ்வளவு தான் நன்றாகச் செய்தாலும் எங்கோ இருக்கும் ஒருவர் குறைந்த புள்ளிகள் பெற்று என்னை விரட்டி விட்டு பல்கலைக்கழக உள்நுழைவைப் பெறமுடிகிறதே" என்று மனம் வெந்தார்கள் தமிழ் மாணவ, மாணவிகள். இதனால் ,சிங்கள மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டார்கள் என்பதில் அர்த்தமில்லை. பொதுவாக அதிகப்படியாகத் தமிழ் மாணவ மாணவியரே பாதிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. அத்துடன் மாற்று உயர் கல்விக்கூடங்களைத் தேடிப் பிடிக்க மற்றவர்களுக்கு இருந்த வசதிகள் வடமாகாண மாணவ மாணவியருக்கு இருக்கவில்லை.
1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் பாடசாலை பகிஷ்கரிப்புகளுடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பித்தன. தொடர்ந்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. அதுவரையில் கல்வியில் சிரத்தை காட்டி வந்த சாதுவாய் பயபக்தியுடன் நடந்து கொண்ட தமிழ் மாணவர்கள் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களை எதிர்க்குங் காலம் பிறந்தது.
இதேபோல் தெற்கிலும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் மாணவரிடையே எழுந்தன. ஜனதா விமுக்தி பெரமுன கடுமைமிக்க இடதுசாரிக் கொள்கைகளைப்பரப்பி கிளர்ச்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்களே இவற்றின் காரண கர்த்தாக்கள்.
தரப்படுத்தல் முறை பற்றி சிங்களவரான பேராசிரியர் இ.கீ. டி சில்வா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.
"சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள வேற்றுமைப்படுத்தும் பக்கச்சார்பான நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சேதம் கணிசமானது. .... ஆனால், பல்கலைக்கழக நுழைவு சம்பந்தமாக (அரசாங்கத்தால்) எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாழ்ப்பாண இளைஞர்களை ஒன்றுபடுத்தவும் அவர்களின் நெருக்குதல்களால் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளவும் உறுதுணையாக அமைந்தன." உண்மையில் தமிழ் மாணவ, மாணவியரின் பல்கலைக்கழக நுழைவுடன் ஷ்ரீமாவோ அரசு விளையாடத் தொடங்கியதே எழுந்து வந்த இளைஞர் மனவெறுப்புக்கு உரத்தையும் வெறியையும் ஊட்டியது என்று கூறினால் அது மிகையாகாது. "காந்தீய முறைகளைக் கடைப்பிடித்து, சத்தியாக்கிரகங்கள் செய்து எதனைக் கண்டுவிட்டீர்கள்? தொடர்ந்து சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் தனித்துவத்தை இல்லாததாக்கவே பாடுபடுகிறார்கள். ஆகவே, அநியாயமாக எங்கள் உரித்துகளைப் பறிக்கும் அவர்களை ஆயுதம் கொண்டு போராடியே வெற்றி கொள்ள வேண்டும்" என்ற முடிவுக்கு வரத் தொடங்கினர் இளைஞர்கள். பல இயக்கங்கள் முளைத்தன.
பண்டைய சோழக்கொடி புலிக்கொடி. அக்கொடியை நினைவுபடுத்துவதாகவும் சோழர் காலத்து மேம்பட்ட உயர்வை நினைவுபடுத்துவதாகவும் சிங்கக் கொடிக்கு எதிர்க் கொடியாகவும் புலிக்கொடி சின்னத்துடன் எழுந்தது தமிழர் புதிய புலிகள் இயக்கம். 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி அவ்வியக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் பெற்றது. சில இயக்கங்கள் காலக்கிரமத்தில் தடம்மாறின. சட்டத்துக்குட்பட்டோர் என்று இந்த நாட்டின் சட்டம் சுட்டிக்காட்டும் இயக்கங்கள் தமது சபதங்களையும் குறிக்கோள்களையும் மறந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்றுதான் கூற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்கள் எனப்படுவோர் இலட்சியங்களை மறக்காது இன்றும் இயங்கி வருபவர்கள் போல்த் தெரிகிறது. இதிலிருந்து சட்டம் பற்றி ஒரு விடயம் புலப்படுகிறது அல்லவா? பெரும்பான்மையினத்தோர் தம் நலம் விரும்பி இயற்றுவதே சட்டம். அதற்கு ஒவ்வ சிறுபான்மையோர் நடந்து கொண்டால் அவர்கள் சட்டத்திற்குட்பட்டவர்கள். தவறின் சட்டத்திற்கு வெளிப்பட்டவர்கள். ஆகவே, சட்டமானது ஜனநாயக அரசொன்றின் கீழ் பெரும்பான்மையினரின் தன்னிச்சையின் பிரத்தியேக ஆயுதமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் அரச பயங்கரவாதம் அசல் நாட்டுப்பற்றாக நாமம் மாற்றப்படுகிறது. இளைஞர்களின் குரல் ஓங்க முதிய அரசியல்த் தலைவர்கள் அவற்றைப் பொருட்படுத்த வேண்டிய காலம் வந்தது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்

1958 இன் கலவரங்கள்

நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் தான் கலவரங்கள் வெடித்துள்ளன என்று அப்பட்டமாக அவர் கூறியதும் கலவரங்கள் நடைபெறாத நாட்டின் மற்றைய இடங்களிலும் கலவரங்கள் வெடித்தன. இதேபோல்தான் 1983 இல் நடைபெற்ற கலவரங்களின் போது ஜனாதிபதி ஜேர்.ஆர். ஜெயவர்தன "சண்டை வேண்டும் என்றால் சண்டை; சமாதானம் வேண்டும் என்றால் சமாதானம்" என்று கூறி மறைமுகமாகத் தமிழர்களைச் சிங்களவர்கள் தாக்க வழி வகுத்தார்.
உண்மையில் டி.ஏ. செனவிரத்ன வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக அதேகால கட்டத்தில் அவரது பெருந்தோட்ட காவல்காரனுடன் இருந்த பிணக்கின் நிமித்தமே கொலை செய்யப்பட்டார் என்று பின்பு தெரிய வந்தது.
1958 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி பாணந்துறையில் இந்து ஆலய பிராமணக் குருக்கள் ஆலயத்துக்கு வெளியே கொண்டுவரப்பட்டு அவர் மீது பெற்றோல் ஊற்றி துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டார். நாட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே மே 28 அன்று அப்பொழுது இலங்கையின் ஆளுநர் நாயகமாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக அதிகாரத்தைத் தாம் ஏற்று அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார். நடந்ததைப் பார்த்தால் சிங்களவர் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது, பாதிப்பு ஏற்படக்கூடாது, மற்றவர்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பே பண்டாரநாயக்க மனதில் மேலோங்கி இருந்ததாகக் கணிக்க வைக்கிறது. ஆகவே குற்றம் புரிந்தவர்கள், புரிந்து கொண்டிருப்பவர்கள் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. சிங்களவரும் மற்றையவர்களுமே அவர் கண்களுக்கு இரு துருவங்களாகத் தெரிந்தனர். அதாவது அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினால் இராணுவம் வெளியே வந்து சிங்கள மக்களுக்குத் தொந்தரவு கொடுத்து விடுவார்களே என்று அவர் பயந்திருக்க வேண்டும். தன்னை அரியணையேற்றிய சிங்கள வாக்காளர் தம்மில் குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதே அவர் நோக்காக இருந்தது என்று கொள்ள இடமிருக்கிறது. இதுதான் ஜனநாயகம் என்ற அரசியல் கொள்கையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் பலமுள்ள சில குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் வழி தாமும் செல்லலாம். அத்தருணத்தில் சிறுபான்மையினர் பாடு அதோ கதிதான்.
மே மாதம் 28 ஆம் திகதி அன்று நாட்டின் அரசியல் யாப்பின் அடிப்படையில் மட்டும் தலைவராகக் கருதப்பட்ட சேர் ஒலிவர் குணதிலக சட்ட ஒழுங்கை நிலைநாட்டத் தாமே பொறுப்பை ஏற்றார். அதாவது சகல பலம் பொருந்திய சிவம் மயங்கி நிற்க அம்பாள் அரசு வேட்டை ஆட எழுந்தது போல் அன்றைய அரசியல் யாப்பின் கீழ் சகல பலம் பொருந்திய பிரதமர் தவித்து நிற்க ஆளுநர் நாயகம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார்.
ஊரடங்குச் சட்டம் பல இடங்களில் அமுல்படுத்தப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. நடந்த நிகழ்வுகள் பல இருட்டடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பலதைப் பற்றியும் கூறுவதானால் நாம் தேங்கி நிற்க நேரிடும். இலங்கை ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியர் தார்ஸி வித்தாச்சி எழுதிய ஆங்கில நூலான "58 இன் அவசரகாலம் இலங்கை இனக்கலவரம் பற்றிய கதை" என்ற நூலில் பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. தற்கால இலங்கைத் தமிழ் மக்கள் மனதில் முதன் முதலில் இலங்கையில் நடந்த இப்பேர்ப்பட்ட தமிழர்க்கெதிரான கொடூரமான கலவரம் பற்றிய, ஓரளவுக்குப் பக்கச்சார்பற்ற விதத்தில் எழுதப்பட்ட, மேற்படி நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரவேண்டும். முன்னமே இக் காரியம் நடைபெற்று விட்டதோ நான் அறியேன். 1915 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரச படைகளின் கையில் அகப்பட்ட சிங்களவரைக் காப்பாற்ற சேர்.பொன் இராமநாதன் இருந்தார். 1958 இல் தமிழர்களைக் காப்பாற்ற எவருமில்லை. ஆனாலுஞ் சேர் ஒலிவர் குணதிலக காலங்கடந்தேனும் எடுத்த நடவடிக்கைகள் ஓரளவு நிலைமையைக் கட்டுக்கடக்கியது. பெருவாரி தமிழ் மக்களுக்குக் காயங்களும், உயிர்ச்சேதமும், உடைமைச் சேதங்களும் உண்டான பின்னரே காலங்கடந்து அவசரகால பிரகடனஞ் செய்யப்பட்டு கலவரங்கள் நிறுத்தப்பட்டன.1983 இல் (பின்னர்) நடந்தவற்றிற்கு ஒத்திகை பார்ப்பது போல் 1958 இல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தின் எதிர் விளைவுதான் பல வருட காலம் தெற்கில் சிங்களவருடன் சுமுகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு நோக்கிப் பிரயாணஞ் செய்தமை. தென்புலத்தில் பல நூறு பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்குத் தமிழ் நில உடைமையாளர்கள் அதுவரையில் இருந்து வந்தனர்.1958 இன் பின் படிப்படியாக அவர்கள் அந்நிலைகளை விட்டு வெளியேற நேர்ந்தது. அரசாங்கம் அவர்களுக்கு எந்தவித நட்டஈட்டையுங் கொடுத்ததாகத் தெரியவில்லை. சிங்களம் மட்டும் வந்த பின், கலவரங்கள் வெடித்த பின், தொடர்ந்து கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும், நாட்டின் மற்றைய பிரதேசங்களிலுந் தமிழர்கள் தொடர்ந்து வாழ முடியுமா என்ற எண்ணம் தமிழர் மனதில் மேலோங்கியது.
சேர்.பொன்னம்பலம் இராமநாதன் , சேர் பொன்னம்பலம் அருணாசலம், அவர்களின் பின் ஜீ.ஜீ. போன்றோர் எப்படியாவது முழு இலங்கையிலுந் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று கருதியே அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வந்தனர். ஆனால் `சிங்களம் மட்டும்' வந்ததுந் தான் தமிழ்த் தலைவர்கள் சிந்தனை மாற்றமடையத் தொடங்கியது. 1949 இலேயே தீர்க்க தரிசனத்துடன் மொழிப் பிரச்சினை வரப்போவது பற்றி எஸ்.ஜே.வி.அவர்கள் கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம். ஆங்கிலம் பொது மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருந்த வரையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சம உரிமை இருந்து. ஆங்கிலம் நீக்கித் தனி மொழிச் சட்டம் வந்ததும் சிங்கள மொழி பேசாதவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர். அந்த நிலையில் உள்நாட்டு இரு மொழி பேசுவோரும் ஆங்கிலம் பேசி. பறங்கியரும் மற்றையோரும் சமநிலையில் தொடர்ந்து சௌஜன்யத்துடன் நாடு முழுவதிலுந் தொடர்ந்து வாழ்வது என்றால் சிங்கப்பூர் போன்று மும்மொழிகளும் அரச மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும், ஆனால் உள்நாட்டு மொழிகள் இரண்டுக்கும் சம உரிமை கேட்ட இலங்கை சமசமாஜக் கட்சியினரைச் சிங்கள வாக்காளர்கள் உதாசீனம் செய்தனர். இனவாதச் சிந்தனைகள் மக்கள் மனதில் இரும்பாக உறையத் தொடங்கின.
1962 இல் ஃபீச்.எச்.ஃபார்மர் (B.H.Farmer) என்பவர் "இலங்கை - பிரிவுபட்ட ஒரு நாடு" என்ற ஒரு நூலை எழுதினார். அதற்கு சோல்பரி பிரவு முகவுரை எழுதினார். அதில் எமது ஆணைக்குழு பிழைவிட்டு விட்டது என்பதை வெளிப்படையாகவே சோல்பரி அவர்கள் ஏற்றுள்ளார். 1958 இன் இனக்கலவரம், 1959 ஆம் ஆண்டில் புத்த பிக்கு ஒருவரால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்காவின் கொலை ஆகியவற்றைக் கண்ட பிறகே அவருக்கு ஞானம் பிறந்தது போலத் தெரிகிறது- பின்வருமாறு அந்நூலில் கூறுகிறார்.
"இலங்கையின் இந்த இரு இனங்கிடையே இருந்த பகை உணர்ச்சி பற்றி (எமது)ஆணைக்குழுவுக்கு அக்கறை குறைந்த ஒரு அறிவே அப்பொழுது இருந்து".
ஜீ.ஜீ.அவர்கள் இடித்து இடித்து உரைத்த பின்னரும் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தள்ளி தமது ஆணையாளர் அறிக்கையில் தமது உள்ளக் கிடக்கையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இலங்கை அரசாங்கமானது அதன் நன்மைக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டின் நன்மை கருதியும் சிறுபான்மையினரின் மன நிறைவை எய்துவதில் குறியாக இருக்கிறது. ஒருவேளை டி.எஸ்.கூறியவற்றை வைத்து ஆணையாளர்கள் இவ்வாறு தமது அறிக்கையில் கூறியிருக்கலாம். ஆனால், இன அடிப்படையிலான உள்ளூர் மக்களின் எண்ணங்கள் பற்றித் தாம் அப்பொழுது அறிந்திருக்கவில்லை என்பதை அவர் ஏற்பதாகத் தெரிகிறது. ஆகவே, ஜீ.ஜீ போன்றோர் அடித்து அடித்து அவர்களுக்குக் கூறியதை அவர்கள் செவிமடுக்கவில்லை என்பது இத்தால் புலனாகிறது. ஆனால், டி.எஸ்.ஸின் அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன் கருதியே அரசு செய்யும் என்று தாம் நம்பியிருந்ததாகவும் கூறுகிறார். இதனை நிரூபிப்பது போல் அடுத்த பந்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"ஆனால், சுதந்திர இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்க உயிருடன் இருந்திருந்தால் 1958 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளும் இன்று தமிழர், சிங்களவரிடையே ஏற்பட்டிருக்கும் மனக் கசப்பும் ஏற்பட்டிரா என்றே கருதுகிறேன். இரு இனங்களுக்கிடையிலான சமய, மொழி, கலாசார வேற்றுமைகளை முன்வைத்து குறுகிய நோக்குடன் போலியான அரசியல் இலாபம் பெற விளைந்த அரசியல் வாதியை அவர் சாடி இருப்பார். ஏனென்றால் இலங்கையை ஒரு ஐக்கியப்பாடுடைய நாடாக்குதலே அவர் நோக்காக இருந்தது. 1945 நவம்பர் மாதத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டக்
கருத்துகளை இந்நாடு ஏற்க வேண்டும் என்று கூறி உன்னத பேச்சொன்றை அவர் நிகழ்த்தும் போது இத்தீவின் நல்வாழ்வுக்கு தமிழர்கள் மிக அவசியம்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சேனாநாயக இறந்ததாலேயே தாம் காத்திராவண்ணம் புதிய திட்டங்கள் அரசியல் வானில் உருவாகின என்று அங்கலாய்த்தார், அது மட்டுமல்ல. தனக்கும் மற்றைய ஆணையாளர்களுக்கும் இப்புதிய திட்டங்கள் மிக்க வருத்தத்தை அளித்துள்ளன என்று கூறி தமது ஆணைக் குழு முன்பாக நிகழ்த்தப்பட்ட சில சிங்கள மக்கட் தலைவர்களின் இன வாரியான பேச்சுகள் (சேனநாயக இருந்துங் கூட) தம்மை அப்பொழுதே விழிப்படையச் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தமது முகவுரையின் கடைசிப் பந்தியில் கூறியவை, அவருக்கு சேனாநாயகவுடன் இருந்த நட்பு ஒரு புறம் இருக்க, அவர் தமிழர்களுக்கோ சிறுபான்மையினருக்கோ தீங்கு விளைந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு அக்கறையற்ற மன நோக்கைக் கொண்டு இருக்கவில்லை என்பது புலனாகிறது.
"இந்த நாட்டில் பின்னர் நடந்த நிகழ்வுகளை அவதானிக்கும் போது எமது ஆணைக்குழுவானது அரசியல் யாப்பில் மாற்ற முடியாதவாறு அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த, இந்தியா,பாகிஸ்தான், மலேசியா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் செய்யப்பட்டவாறு நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எம்மை வாட்டுகிறது" என்று கூறினார்.
இறுதியாக தமிழர் சிங்களவர் மத்தியிலான அந்நியோன்யமும் புரிந்துணர்வும் அரசியல் யாப்பு உத்தரவாதங்களில் மட்டும் தங்கிவிட முடியாது என்று கூறி அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தினதும் அவ் வரசாங்கத்தை வெற்றி அடையச் செய்தவர்களினதும் உண்மையான நல்லெண்ணம், பொது நல்லறிவு, மனித நேயம் போன்றவற்றிலேயே அது தங்கியுள்ளது என்றார். அண்மையில் இலங்கை வந்த ஒரு இந்துப் பெண் ஆன்மீகவாதிகூட இரு தரப்பார் மனதிலும் அன்பு இருந்தால் தான் நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்படலாம் என்றார். பயம், வைர்யம், பொறாமை, வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் தீர்வுகள் பலகாலம் நிலைக்கமாட்டா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இலங்கையின் முதல் அரசியல் யாப்பைத் தந்த சோல்பெரிப் பிரபு அங்கலாய்க்கும் வண்ணம் 1956 ஆம் ஆண்டின் பின்னைய நிகழ்வுகள் நடந்தேறின. தொடர்ந்தவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

சிங்கள மயமாகும் தமிழ்க் கிராமங்கள்

வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையினால் தமிழ் கிராமமொன்றிற்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இதேபோன்று ஏற்கனவேயும் பல செயற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஏடிபல படை நடவடிக்கை மூலம் வவுனியா - பறையனாலங்குளம், மதவாச்சி - மன்னார் ஆகிய இரு வீதிகளையும் கைப்பற்றிய படையினர் பறையனாலங்குளத்தை சப்புமல்புர என பெயர்மாற்றம் செய்து பறையனாலங்குளம் சந்தியில் உள்ள படைமுகாமில் பெயர்ப்பலகை ஒன்றை நட்டு அதனை அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தையினால் திரைநீக்கம் செய்து விழா கொண்டாடினர். இதனை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் எடுத்துக் காட்டி சிறிது காலத்தில் பறையனாலங்குளம் சப்புமல்புரவாக மாற்றப்பட்டதை தடுக்க முடிந்தது.
ஆனால்... நெளுக்குளம், செட்டிகுளம் வீதியில் 1936 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உட்குளம் உலுக்குளமாக்கப்பட்டதை எவராலும் தடுக்க முடியவில்லை என வன்னியின் மூத்த நவீன இலக்கியவாதியான எஸ்.எல்.சௌந்தரநாயகம் (வன்னியூர்கவிராயர்) அவரின் படைப்பொன்றில் வெளிப்படுத்தியுள்ளார் என அவரின் ஊரவரும் நண்பர்களும் உறவினர்களும் கூறுகின்றனர்.
வவுனியா நகரிற்கு தெற்காக வவுனியா கண்டி வீதியில் உள்ள ஈரற்பெரியகுளம் என்ற கிராமத்தை இரட்டை என அழைக்கின்றனர். இதன் பெயரும் மாறி வருகின்றது.
இவை திட்டமிட்டு செய்வதனை செய்பவர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் உண்மை திட்டமிட்ட நடவடிக்கையே ஆகும்.
வவுனியாவிற்கு தெற்காக வவுனியா கண்டி வீதியில் கற்குழிக்கும் மூன்று முறிப்பிற்கும் இடைப்பட்ட இடத்தில் காட்டிலாகா திணைக்களம் இருந்தது. திணைக்களத்தை சூழவும் தேக்கு நடப்பட்டு அந்த இடத்தை தேக்கங்காடென அழைத்தனர். அந்த இடத்திற்கு முன்பாக ஜோசப்படைத்தளம், பொலிஸ் உயரதிகாரிகளின் அலுவலகம் என்பன வந்தபின் காட்டிலாகா திணைக்களம் பொலிஸ் புலனாய்வுத்துறையின் வசமானது. அதனைச் சூழவுள்ள தேக்கங்காட்டு பிரதேசத்தில் கணிசமான இடம் அவர்கள் தமது தேவைக்காக எடுத்தனர். இப்பொழுது தேக்கங்காடென்று அழைக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தேக்கவத்தை ஆகிவிட்டது. எங்காவது ஒரு சிலர் தேக்கங்காடென அழைப்பர், மற்றும்படி தேக்கவத்தையாகவே மாற்றப்பட்டுவிட்டது. இந்த இடத்தில் பொலிஸார் திணைக்கள கட்டிடத்தையும் சூழவுள்ள குறிப்பிட்டளவு பகுதியையும் எடுத்தனர். ஏனைய அரச காணியை தனியார் ஆக்கிரமித்தனர்.
தனியாரிடமிருந்தாவது காணிகளை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியுள்ளனர். இதுவும் தேக்கங்காடு தேக்கவத்தையாக மாறுவதற்கு ஒரு காரணமாகும்.
1936 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் வன்னியின் எல்லையை நோக்கிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. இதனை அன்றைய தமிழ் அரசியலாளர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததே தவிர நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் வவுனியாவின் தெற்கு கிழக்குப் பிரதேசங்கள் சிங்கள மயமானது. இதனை இன்று நாம் சொன்னால் அந்த பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குடியேறியவர்களின் பேரப்பிள்ளைகளே இன்றுள்ளனர். அவர்கள் நாம் இங்கு பிறந்தவர்கள் இது எங்கள் சொந்த இடம் என்பார்கள். இது பெரும் சிக்கலான விடயம். உண்மையை பொய் மேவக்கூடிய வகையில் நிலைமை காலம் கடந்து விட்டது.
ஆனால்... இதன் தொடர்ச்சியாக இன்றும் திட்டமிட்டு தமிழ் கிராமங்களை சிங்கள மயமாக்குவது எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களும் சிந்தனையாளர்களும் கவனம் கொள்ளுங்கள்.
மணலாறு பிரதேசத்தை திட்டமிட்டு கையகப்படுத்திய சிங்களவர் 1964 ஆம் ஆண்டு அங்கு குடியேற்றத்தை செய்து 1984 ஆம் ஆண்டு மணலாறை சூழவுள்ள தமிழ் கிராமங்களான பதவிக்குளம், தனிக்கல், மண்கிண்டிமலை, கும்பகர்ணன் மலை... உட்பட பல கிராமங்களில் இருந்தும் தமிழரை விரட்டியவர்கள் சிங்களப் பெயர்களை கிராமங்களுக்கு சூட்டி இன்று வெலிஓயாவென மார்தட்டுகின்றனர்.
தமிழரை அறிவற்ற முட்டாள்களாக்கி தாம் நினைத்ததை செய்து முடிக்கலாமென்ற நயவஞ்சகத் திட்டத்துடன் தான் வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக இராமயன்கல் என்ற கிராமம் அம்பேவத்த என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனை அந்த இடத்தில் பொலிஸ் முகாமிட்ட பின்னர் பொலிஸாரின் திட்டமிட்ட வேலை தான் என மக்கள் குறைபடுகின்றனர்.
மக்களால் குறைபட மட்டுமே முடியும். வேறு எதனையும் செய்யக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை. எனவே அரசியலாளர்கள் இதனை கவனத்திலெடுங்கள். உரியவேளை இதனைச் சுட்டிக்காட்டுங்கள். சிலவேளை அவர்களின் சிந்தனையில் தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக கூட இது தொடர்கின்றதென்பதை நாம் சுட்டிக் காட்டலாம். ஏனெனின் இதேபோன்று தான் காலாகாலமாக தமிழரின் நிலங்களில் இருந்து தமிழரை துரத்திவிட்டு இருபதாண்டுகளுக்கு மேலாக சொந்த இடத்தில் வாழ முடியாத நிலைமையினை திட்டமிட்டு செய்து வந்துள்ளனர்.
தமிழர் மீது இதையொரு ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகிறது. கடந்து போன காலங்கள் வெறும் நாட்களல்ல. அது தமிழரைப்பொறுத்த வரையில் மிகவும் துயர் சுமந்த வரலாறு. இந்த வரலாற்றை சரியாக நோக்குகையில் தமிழரின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பூர்வீகமாக தமிழர் வாழ்ந்த நிலங்களில் தமிழரின் அடையாளத்தை அழித்தொழிக்கும் வகையில் பேரினவாதிகள் தமிழரின் கிராமங்களை சிங்களப் பெயர் மாற்றம் செய்வதிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.
நீண்ட காலமாக இந்த திட்டமிட்ட செயல் பற்றி எடுத்துரைக்கும் போது அதனை ஒரு செல்லாக்காசாக தட்டிக்கழித்துவிட்டு அவர்கள் அவர்களின் வேலையினை தொடராகச் செய்வதற்கு தமிழரும் துணை போயுள்ளனர். இப்படி துணை போவோரை இன்றும் தமிழினத்தின் அழிவிற்கு காரணமானவர்களாய் நாம் சில பிழைப்பு வாதிகளாய் இருப்பவர்களைக் காணலாம்.
வவுனியா மாவட்டத்தில் இராமயன்கல் அம்பேவத்தையாக மாற்றப்பட்டமை பற்றித் தமிழர் நெஞ்சுகள் குமுறுகின்றன. ஏன் இது போன்று செய்கிறீர்கள்? ஒரு இனத்தையும் அந்த இனத்தின் உணர்வையும் ஏன் மதிக்க மறுக்கின்றீர்கள்? இதே போன்று மாறி உங்களுக்கும் நடக்க வேண்டுமா? பொதுப்படையாக!
இராமயன்கல் இராமயன்கல்லாகவே இருந்தால் தான் அழிவுகளை தடுக்க முடியும் என்பதை எந்த அரசியல் ஞானமுள்ளவர்கள் ஒத்துக் கொள்ளப் போகின்றார்கள்?



மணலாறு போன்று திருமலை, மட்டக்களப்புக்கிடையில் சிங்கள குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ள அரசு முயற்சி



வடக்கு- கிழக்கை பிரிக்க மணலாற்றில் பாரிய சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டது போல், இன்று திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்க இந்த அரசாங்கம் முயல்வதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (ஏ.ரி.பி.சி.) வழங்கிய பேட்டியொன்றிலேயே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;
சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது பெரும் யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என்பதற்கு அப்பால் நாங்கள் ஒரு அரசாங்கத்தை நடத்துகிற வடக்குப் பிரதேசத்தில் இராணுவ ரீதியான ஒரு வெற்றியைக் காட்டி தங்களுடைய அரசியல் பலத்தைத் தக்க வைக்க வேண்டிய தேவை ஒன்று இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்த வகையில் தான் இத்தகைய ஒரு நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்ள முனைகிறது.
புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க மிக உச்சமான பயிற்சி பெற்ற, பிற படையணிகள் நம்பும் படையணிகளை முன்னே நிறுத்தித் தான் பதில் தாக்குதலை மேற்கொள்ள வேண்டியநிலைமை அங்குள்ளது. ஏனெனில், இலங்கையில் அனைத்து படையணிகளுமே புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் என்பதல்ல.
இலங்கை இராணுவமானது இழப்புகளின் மத்தியில் மன்னார் - மடுப்பகுதியை நோக்கி முன்னேற முயற்சித்தது. ஆனால், கடந்த ஆனி மாதம் முற்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த முன்னேற்ற முயற்சி முற்றாக முறியடிக்கப்பட்டது. அதனால், பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மற்றொரு போர் அரங்கை அமைக்க முயல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அது மணலாற்றில் அமையுமா? வவுனியாவில் அமையுமா என்பது பற்றி முடிவெடுத்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.
மணலாறைப் பொறுத்தவரையில் பாரிய சிங்களச் சதியின் பின்னணி உள்ளது. ஜே.ஆர். ஜெயவர்த்தன கொடுங்கோலாட்சியில் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் 42 கிராமங்களைச் சேர்ந்த 13,228 தமிழ்க் குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பச்சை தமிழ்க் கிராமங்களான செம்மலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவாடி உள்ளிட்ட 42 கிராமங்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறையில் இணைக்கப்பட்டன. இதன் முக்கிய நோக்கம், தமிழர் தாயகத்தின் தொடர் நிலப்பரப்பில் வடக்கையும், கிழக்கையும் துண்டாடிவிட்டு நிலையான சிங்களக் குடியேற்றத்தை நிரந்தரமாக அமைக்கும் சதி முயற்சியாக அது நிகழ்த்தப்பட்டது.
அந்த சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடத்தப்பட முடியாவிட்டாலும் படை ஆக்கிரமிப்பு என்பது இன்னமும் உள்ளது. காடுகள் அதிகமாகவும் ஒன்றிரண்டு நீர்நிலைகளும் கொண்ட அரணாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்.இருந்தாலும் அது எங்களின் இதயபூமி. அங்கு இலங்கை இராணுவத்தினருக்கு நாம் தரப்போகும் பதில் என்பது மிகக் காத்திரமானதாக இருக்கும்.
எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும் தனது ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுகிற சக்தியினது அடி ஆழமான மக்கள் ஆதரவுத் தளத்தைக் குறிவைத்து முறைகேடான தாக்குதல்களை நடத்துவது வழக்கம். அனைத்து அரசாங்கங்களுமே இந்த உத்தியைப் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது நடத்தப்பட்டு வரும் விமானத் தாக்குதல்களில் 90 வீதமானவை பொதுமக்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகிறது. ஆனால், எங்கள் மக்கள், இந்தச் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக தங்கள் இடங்களில் கட்டுமானங்களை அமைக்கக் கூடியவர்களாகவும் உளவியல் தாக்கத்தை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால், இந்த விமானத் தாக்குதல்களானது எமது மக்களிடத்தில் இனிமேலும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
எமது போராட்டம் மக்களுக்கானது. இந்த அச்சுறுத்தல் எழுந்த காலகட்டத்தில் மக்களின் வீடுகளுக்குச் சென்று தற்காப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம். எவ்வகையான குண்டு வீச்சுகளை வீசினால் எவ்வகையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவரித்தோம்.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் எங்களது நிர்வாகப் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பதுங்கு குழிகள் உள்ளன. வானூர்திகள் வானில் பறக்கும்போது எங்கள் குழந்தைகள் பதுங்கு குழிகளில் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து படிப்பைத் தொடரும் நிலை உள்ளது.
பொது இடங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். சிறுவர்களைப் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசும் வெளிநாட்டு அமைப்புகள் இந்த விடயங்களில் வாய்மூடிக் கொண்டிருப்பது விநோதமான விடயம். எங்கள் தலைவரின் திட்டத்தின் அடிப்படையில் மிகக் கச்சிதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழீழ வான்படை தொடக்க நிலையில் உள்ளது. அது தனது அடுத்தடுத்த சிறகுகளை விரிக்கின்ற காலத்தை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். ஒரு நாடும் இன்னொரு நாடும் நடத்தும் வான் சமருக்கான கலங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்து வருகிறது. வலுவுள்ள ஒரு வான்படை இங்கிருப்பதால் அதனை எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது என்பதை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியாசமான தரையமைப்பைக் கொண்ட தனித்துவமான நிலம். அந்த நிலம், கெரில்லா வகை போராளிகளின் தாய்மடியாகும். கடந்த 25 வருடகாலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப்படையாக மேற்கொண்டு வருகின்றன.
குடும்பிமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் இராணுவம் செறிவாக பரவலாக இருப்பது உண்மைதான். அவர்களுடைய நடமாட்டம் அதிகம் தான். ஆனால், யார் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள், கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறார்கள் என்ற விடயத்துக்குள் இவை சிக்குப்பட்டுவிட முடியாது.
கிழக்கில் யாருடைய செயற்படும் திறனைக் கட்டுப்படுத்த முடிகிறதோ அவரது செயற்படும் திறன்தான் உண்மையானதாக இருக்க முடியும். கடந்தவாரம் அம்பாறைப் பகுதியில் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவ முயன்ற விஷேட அதிரடிப்படையினரைத் தாக்கிய எம்மவர்கள், படைச்சிப்பாயின் உடலையும் ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.
அம்பாறையைப் பிடித்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களால் இது தொடர்பில் பதிலேதும் சொல்ல முடியாது. கிழக்கைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரையினில் தங்களது செல்வாக்கைச் செலுத்தலாம். மறுதரப்பினரால் எந்த ஒரு சம்பவமும் இல்லாத ஒரு சூழ்நிலையை அங்கே கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும்.
இலங்கை அரசாங்கத்தின் செய்திகளின் அடிப்படையிலும் கிழக்கில் நாங்கள் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கைகளை அவ்வப்போது சொல்லாத நிலையிலும் மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படுவது வழமைதான். ஆனால், ஒரு விடயம்.... கிழக்கில் இப்போதுள்ள படையணிகளின் எண்ணிக்கையை விட நாம் குறைவாக இருந்த காலத்திலும் எமது செயற்பாடுகள் இருந்தன.
இப்போது ஒரு முழு ஒழுங்குபடுத்துதல் காலகட்டம் என்ற அளவில் தான் நாம் தெரிவிக்க முடியும். ஆனால், இலங்கை அரசாங்கமும் இராணுவமும் கிழக்கிலே சாதிப்பதாகச் சொல்லுகிற விடயம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்திய அமைதிப்படை செய்ய இயலாததை இலங்கை இராணுவம் செய்துள்ளதாகக் கூறியிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வரலாறும் தெரியவில்லை. படைத்துறை வரலாறும் தெரியவில்லை.
இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், தொப்பிகல என்று சிங்களப் பெயர் மூலம் அழைக்கப்படுகின்ற தூய தமிழ்ப் பகுதியான குடும்பிமலை பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். இன்று வரை இராணுவத்தால் அந்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. எதைச் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
கண்காணிப்புக் குழு மீண்டும் பணியைத் தொடங்கவுள்ளதாகக் கூறியிருக்கிறது. அப்படியானால், அவர்கள் இவ்வளவு காலமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இதையே தான் நாம் சந்திக்கும் கண்காணிப்புக் குழு நண்பர்களிடமும் கேட்டு வருகிறோம். அவர்களின் செயற்பரப்பை சுருக்கி அவமானப்படுத்தி ஒடுக்கி அவர்களை மூலையிலே வைத்திருக்கிறது இந்த அரசாங்கம்.
கண்காணிப்புக் குழுவினர் 10 பேர் கூடுதலாக வந்திருக்கிறார்கள் தான். ஆனால், அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும்.திருகோணமலை என்பது எமது தொன்மத் தமிழர் நிலம். திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஒரு சிங்களச் செருகலை ஏற்படுத்த முயற்சிக்கிறது சிங்களம். குறிப்பாக, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க சிங்களம் முயற்சிக்கிறது. மகாவலித் திட்டத்தை அமுல்படுத்தினால் வாகரை வரை சிங்களக் குடியேற்றம் நீளும் அபாயமுள்ளது. சேனநாயக்கா, ஜெயவர்த்தனாவைபோல் சம்பூர் பகுதியை மகிந்த ராஜபக்ஷ சட்டம் மூலம் சிங்களக் குடியேற்றமாக்க முயற்சிக்கிறார் என்றார்

யாழ்பாணத்தின் வரலாறு

யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.
காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.
ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.
ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)
நயினாதீவு கல்வெட்டு


  1. .............. நாங்கள் .......................

  2. வந்து ஊராத்துறை

  3. (யில்) பிரதேசிகள் வந்து

  4. இருக்க வேணுமென்றும்

  5. அவர்கள் ரஷைப்பட

  6. வணுமென்றும் பல தை

  7. றகளில் பிரதேசிகள் வந்து நந்து

  8. றையிn(ல) கூடவேணு மென்று

  9. (ம்) நாம் ஆனை குதிரை மேல் ஸ்நெஹ

  10. (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை

  11. கொடுவந்த மரக்கலங் கெட்டது

  12. ண்டாகில் நாலத் தொன்று பண்டா

  13. (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும்

  14. (உ) டையவனுக்கு விடக்கடவதாகவு

  15. (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண்

  16. டாகில் செம்பாகம் பண்டாரத்துக்

  17. (கு) க் கொண்டு செம்பாகம் உடைய

  18. (வ) னுக்கு விடக்கடவதாகவும் இவ்

  19. வவஸ்தை (ரு) ள்ளதனையுங்க

  20. வில்லிலுஞ் செம்பிலும் எழுத்துவெ

  21. ட்டி வித்து இவ்வவஸ்தை செய்துங் கு

சமஸ்கிருதப் பாகத்தின் மொழி பெயர்ப்பு
பெயர்ப்புவரி 22 – 23 சகல சிங்களத்துக்கும் சக்கரவர்த்தி யாகிய பகை அரசர்களுக்கு காட்டுத் தீயாயாகிய வேபராக்கிரம புஜோ (பாஹி)....
இந்திரபாலா.கா.(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், 1969
ஸிகரஹா என்பது பன்றி எனப் பொருள்தரும் சமஸ்கிருதச் சொல். சூகரம் என்று தமிழ் நிகண்டுகளிலும் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பிராகிருத வழக்காறுகளில் இது ஹ{ரா என்றும் ஊரா என்றும் உருமாறும். சிங்களத்தில் இது வழக்கிலுள்ள சொல். ஸ{கரதித்த (ஸ{கர தீர்த்தம்) என்று சூளவம்சம் குறிப்பிடுவது பன்றித்துறை என்பதற்குச் சமதையானது. பன்றியின் காற்குளம் என்ற பொருளில் கடற்கோட்டைக்கு ஒல்லாந்தர் ஹம்மன் ஹீல் (ர்யஅஅநnhநடை) எனப் பெயரிட்டது. கோட்டையின் வடிவமைப்பினால் மாத்திரம் அல்ல என்றே தோன்றுகின்றது.



ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கடற்கோட்டைப் பகுதியைக் கடந்து சென்ற பன்நாட்டுக் கடல்வணிகத்தின் தொல்லியற் தடங்களை நெடுந்தீவில் பெரியதுறை அருகிலுள்ள வெடியரசன் கோட்டையிலும் காரைநகரில் கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள வேரப்பிட்டியிலும் பொன்னாலையில் சம்புத்துறைக்குப் பக்கத்திலுள்ள திசைமழுவையிலும் காணலாம். பழைய துறைகளை ஒட்டியுள்ள இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் பௌத்த சின்னங்கள், கடல்வணிகத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் அக்காலத்தில் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.



இருப்பினும், இப்பகுதியின் கடல்வழித் தொடர்புகள் பௌத்த தடயங்களின் காலத்திற்கும் முந்தியவை என்பதை, காரைநகரின் உட்புறத்தில் களபூமியில் கிடைத்த பெருங்கற்காலத் தடயங்களும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள வேலணைத்தீவின் தென்கிழக்கில் சாட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் கிடைத்த மட்கலத்தடயங்களும் தெளிவுபடுத்துகின்றன.



இரண்டாம் இராசாதிராசசோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு
இவன் தன் படைநிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம் , மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளும் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மருமகனராய் ஈழ ராச்சியத்துக்குங் கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனஞ் செய்து இவரையும் இவருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகலிட்டுப் புலைச்சேரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும், அழித்து ஈழத்தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங் கொண்டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காதமேற்படவுந் தென் வடல் முப்பதின்காதமேற்படவும் அழித்து இத்துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக்கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் தமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரியம் எல்லாப் படியாலும் இவன் (சோழத்தளபதியாகிய பழையனுருடையான வேதவன் முடையான் அம்மையப்பனான ‘அண்ணன் பல்லவராயன்) அழியச் செய்வித்த படிக்கும் (சதாசிவபண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம்: 1967)
12ஆம் நூற்றாண்டில் ஊர்காவற்றுறையின் கேந்திர, வணிக முக்கியத்துவங்களை இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன. இரண்டாம் இராஜாதிராஜசோழனது (1163-1178) திருவாலங்காட்டுக் கல்வெட்டு, சோழர்களுக்கும் பராக்கிரமபாகுவிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் படைத்தளஙக்களுள் ஒன்றாக ஊராத்துறை இருந்ததை அறியத்தருகின்றது. தற்பொழுது நயினாதீவுக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள, முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ் சமஸ்கிருதக் கல்வெட்டு, ஊர்காவற்றுறையில் பன்நாட்டு வணிகம் ஊக்குவிக்கப்பட்டதைத் தெரியப்படுத்துகின்றது. கடற்கோட்டைக்கு அணித்தாக, நீரோட்டங்கள் கலக்கும் அபாயகரமான ஏழாற்றுப் பிரிவில் அடிக்கடி மரக்கல விபத்துக்கள் நடந்ததையும் இக்கல்வெட்டைக் கொண்டு ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிதைந்த மரக்கலங்களில் வந்த பொருட்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. சர்வதேசக்கடல் சார் சட்டங்களின் (ஐவெநசயெவழையெட ஆயசவைiநெ டுயறள) தோற்றுவாய்க்குரிய எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.
காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும், முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில், வியாவில் என்ற இடத்தில், ஐயனார் கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது. இக்கோயில், போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை, காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும் செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)
காரைநகர்ச் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...
வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று, சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு, பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)
நானுமெனது தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது. முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர் கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார் கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின் வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை இடிக்க வரவில்லை....
(---சூரியநாராயணக் குருக்கள்)
------ பின்னர் போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது. அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர் நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப் ப+சை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில அறையில் வைத்து இரகசியமாய்ப் ப+சை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும் இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)
(ஆன்ம தர்சநம், கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)
வரிசையாக ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று, கடற்கோட்டையைப் ப+தத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக் கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.
அழிபாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை, கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால் மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை அறியத்தருகின்றது.
கடற்கோட்டைக் கல்வெட்டுக்கள்
முதலாவது கல்வெட்டு
ஸவஸ்திஸ்ரீஈழமு(ழு)(ங்)துவ்கொண்டு ஈழத்தnசெரயும் பெண்
டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடுபொன அதிகாரத் தண்டநாசகனார் ஐய
(ங்) கொண்டn (சொ)(ழ) மூவேந்(த)வெளார் மாதொட்டமானஇராசராசபுர
ஸ்வ்திஸ்ரீஈழமான மும்முடி சொழமண்டல......ண...குல....
இந்திரபாலா. கா:(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் 1969)
பாய்க்கப்பல் போய் நீராவிக்கப்பல் வந்த காலத்தில், பாக்குநீரிணையின் ஆழம் போதாததால் ஊர்காவற்றுறை பன்நாட்டு முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும், இந்தியாவின் கிழக்குக் கரையுடன் வணிகம் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணப் பரவைக்கடலின் சங்கு வங்காளம் வரை சென்றதையும், விசாகப்பட்டினத்து வடக்கன் மாடு இங்கு வந்ததையும் ஊர்காவற்றுறையில் இன்றும் காணப்படும் சங்குக் கழிவுக்குவியல்களாலும் இடிந்து போன கால்நடைத் தொற்று நோய்த்தடுப்புக் கட்டிடங்களாலும் அறிந்து கொள்ளலாம். ஊர்காவற்றுறையில் இறக்கப்பட்ட சரக்கு, மாட்டு வண்டித் தொடர்களில் அனுராதபுரம், கண்டிவரை சென்றதை எனது பாட்டனார் கூறக்கேட்டிருக்கின்றேன்.
காலனித்துவம் போய்த் தேசியங்கள் வந்த காலத்தில் ஊர்காவற்றுறையின் வணிகம் நின்று போனாலும் கேந்திர முக்கியத்துவம் போய்விடவில்லை வணிகத்தையும் கடற்பாதைகளையும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவைப்பட்ட கேந்திர அமைவிடம் அவற்றைத் தடுக்கவும் தேவைப்பட்டது. வடபுலத்திற்கான இலங்கைக்கடற்படையின் தலைமையகம் கடற்கோட்டைக்கு மிகவும் அண்மித்த நிலப்பகுதியான காரைநகர், நீலங்காட்டில் அமைந்தது. இக்காரணத்தினாலேயே, 1971 ஆம் ஆண்டு து.ஏ.P. கிளர்ச்சியின் போது கைதான ரோகண விNஜிவீரவும் சகாக்களும் பாதுகாப்புக் கருதி கடற்கோட்டையிலேயே சிலகாலம் சிறைவைக்கப்பட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மிகப்பழங்காலந்தொட்டு மேற்கிற்கும் கிழக்கிற்குமான கடற்பாதை, மன்னார் வளைகுடா – பாக்குநீரிணைய+டாகச் சென்றது. அபாயகரமானது என்பதால் ஆழ்கடல் பாதைகள் ஆதிகாலத்தில் இயன்றளவு தவிர்க்கப்பட்டன. இலங்கையின் தென்கிழக்கு மூலையில் , காந்தப்பாறைகள் என அறியப்பட்ட புசநயவ டீயளநளஇ டுவைவடந டீயளநள காரணமாக இலங்கைப் பாதுகாப்பும் மன்னார் வளைகுடாவின் முத்தும் பாக்கு நீரிணையின் சங்கும் கிழக்கையும் மேற்கையும் இங்கு சந்திக்க வைத்தன.
இந்தியாவின் மேற்குக் கரையினரும் கிழக்குக் கரையினரும் பரஸ்பரம் வந்து போனதும் கிரேக்கரும் உரோமரும் வந்ததும் அரபுக்களும் சீனரும் வந்ததும் பின்னர் ஐரோப்பியர் வந்ததும் மன்னார் வளைகுடா பாக்குநீரிணைக் கடற்பாதைய+டாகவே பெரிதும் நடைபெற்றதை அதன் இருபுறக் கரைகளிலும் காணப்படும் எண்ணிறந்த தொல்லியற் தடங்களால் அறிந்து கொள்ளலாம்.
இராமர் அணை என்றும் ஆதாமின் பாலம் என்றும்அழைக்கப்படும் சேதுவை இவர்கள் மன்னார்த்தீவிற்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள கால்வாயால் அல்லது இராமேஸ்வரம் தீவுக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயால் கடந்தனர். பெரிய துறைமுகம் எனப்பொருள் தரும் மாதோட்டம் என்ற மாந்தையிலும் பாம்பன் கால்வாயின் பெருநிலப்பகுதியில் உள்ள அழகன் குளத்திலும் அறியப்பட்ட தொல்லியற் தடங்கள், அவை பல நூற்றாண்டுகளாக பல நாட்டினரும் வந்துபோன பெரும் நகரங்களாக விளங்கின என்பதைத் தெரியப்படுத்துகின்றன.
ஏறத்தாழ ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் மாந்தைக் கால்வாய் சேறடைந்து போக, பாம்பன் கால்வாய் மட்டும் தொடர்ந்து இயங்கியது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய வணிகர்களான செட்டியர்களின் தாயகம் எனப்படும் செட்டிநாடு, பாம்பன் கால்வாய்க்கு வடக்கிலும் மற்றொரு பாரம்பரிய வணிகர்களான முஸ்லீம்களின் பழைமை முக்கியத்துவம் வாய்ந்த நகரமான கீழக்கரை, பாம்பன் கால்வாய்க்குத் தெற்கிலும் அமைந்திருப்பது தற்செயலானவையன்று.
1860 இல் நீராவிக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. 1869 இல் சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகமும் இலங்கையைச் சுற்றி செல்லும் கடற்பாதையும் தனி முக்கியத்துவம் பெற்றன. பாக்குநீரிணைப்பாதை அறவே கைவிடப்பட்டது. துறைமுகங்கள் செல்வாக்கிழந்தன. வணிகப்பெரு மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையை மீண்டும் பன்நாட்டுக் கடற்பாதையாக்கும் சேதுசமுத்திரத்திட்டம் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருவதொன்று. சேதுசமுத்திரத் திட்டம் வந்தால், கொழும்பின் இழப்பைச் சரி செய்யவும் தூத்துக்குடியுடன் போட்டியிடவும் காங்கேசன்துறையை விரிவாக்கவென்று, அறுபதுகளின் பிற்பகுதியில், டட்லிசேனநாயக்கா வந்து காங்கேசன்துறை மருத்துவமனைப் பகுதியில் அத்திவாரமிட்டதைப் பார்த்து நினைவுக்கு வருகிறது. அத்திவாரக்கல் இப்பவும் இருக்கலாம்.
இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் முனைப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா மட்டும், தன்னுடைய கடற்பகுதியில் செய்யப்போவதாக , பல்வேறு அபிவிருத்திக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதுகாப்பு என்பதே முனைப்பான காரணம் என்பதில் ஐயமில்லை. இதில், தனக்குப் பங்கு என்ன என்பது இலங்கை அரசின் கவலை. இருவருக்கும் பொதுவான பாதையாக இருக்கலாம் என்றும் இலங்கை அரசின் நிலப்பாலத்திட்டத்தை இதனுடன் இணைக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல பன்நாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளக் காத்திருக்கின்றன. டெல்லியிலும் சென்னையிலும் கொழும்பிலும் இதைத் தீர்மானித்துவிடலாம் என்ற போக்கும் தெரிகின்றது.
எது எவ்வாறாயினும் சேதுசமுத்திரத் திட்டத்தால் வரப்போகும் கால்வாய் எங்கள் தீவகத்தின் புழைக்கடைய+டாகத்தான் போகப் போகின்றது. பாக்கு நீரிணையின் பாரம்பரியப் பங்காளிகள், அதன் இருபுறமும் வாழும் மக்கள், பாக்குநீரிணை இவர்களது பொருளாதார உரிமை மட்டுமல்ல, பண்பாட்டு உரிமையும் கூட, திட்டத்தில் இவர்களுக்குப் பங்கு என்ன என்பது தெளிவாகவில்லை. பாதிப்பு என்ன என்பதும் தெளிவாகவில்லை. சூழல், பொருளாதார, பண்பாட்டு விளைவுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. எங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு.

காலாவதியாகிப்போன ஒற்றையாட்சித் தத்துவம்

இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஒற்றையாட்சித் தத்துவம் நிராகரிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் டி.எஸ். சேனநாயக்கா, பாரன் ஜெயத்திலகா போன்ற சிங்கள முதலாளித்துவவாதிகள் ஒற்றையாட்சி அமைப்பை வலியுறுத்தினார்கள். ஆனால், அக்காலகட்டத்தில் பலமான எதிர்க்கட்சியாகவிருந்த இடது சாரிகளான லங்கா சமசமாசக்கட்சி, கொம்யூனிசக்கட்சி முதலானவர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படுவதோடு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
1944ல் கொழும்பு மாநகரசபை மாநாடு
1944ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக கொழும்பு மாநகரசபை முன்றலில் இலங்கை கொம்யூனிஸ் கட்சியின் முதலாவது தேசிய மகாநாடு இடம்பெற்றது. இம்மகாநாட்டில் இலங்கைத்தீவு சுதந்திரம் பெறும் போது வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மாநில சுயாட்சி பெறும் உரிமை உண்டு என்றும் அதனை இலங்கை காம்யூனிஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்மகாநாட்டில் கட்சியின் தலைவர் கலாநிதி எஸ்.ஏ.விக்கிரமசிங்கா, பீட்டர் கனமன், வைத்தியலிங்கம் மாஸ்ரர், காம்யூனிஸ் கார்த்திகேசு மாஸ்ரர் எனப்பலர் அக்கால கொம்யூனிஸ் கட்சிப் பிரமுகர்கள் பங்குபற்றி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அவர்கள் யாவரும் வடக்குக்கிழக்குத் தமிழ் மக்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள்.
சேர் அன்றூவ் கோல்டி கொட் அறிக்கையும் திரைமறைவுச் சதியும்
இதன் பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கவும் அதற்குப் பொருத்தமான பாராளுமன்ற அரசில் அமைப்பு ஒன்றை உருவாக்கவும் அக்கால கவனராக இருந்த சேர் அன்றூவ் கோல்டி கொட் அவர்கள் பொருத்தப்பாடான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் டி.எஸ்.சேனநாயக்கா போன்ற தலைவர்கள் சேர் அன்றூவ் கோல்டிகொட் அவர்களை தமது கைக்குள் போட்டுக்கொண்டு தமது முதலாளித்துவ நலன்களை முதன்மைப்படுத்தி ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றை வேண்டிநின்றனர். சேர் அன்றூவ் கோட்டி கொட் அவர்களின் மிகப் பலவீனமான பக்கங்களை தனது நரித்தனமான தந்திரோபாயங்கள் மூலமாக எஸ்.டி.சேனநாயக்கா பயன்படுத்திக் கொண்டார். இதற்கு எதிராக அக்கால தமிழ்ப் பிரமுகர்களது கையெழுத்தைப் பெற்று தந்தை செல்வா பிரிட்டிஸ் அரசுக்குத் தனது எதிர்ப்பை மகஜர் மூலம் அனுப்பி வைத்தார். தந்தை செல்வா தனது வாழ்நாளில் பங்குபற்றிய முதல் போராட்ட நடவடிக்கை இதுவேயாகும்.
1948 சோல்பரி அரசியல் யாப்பு
1944ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட சோல்பரிப் பிரபு தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு ஒரு வெஸ் மினிஸ்டர் முறையிலான யாப்பை வரைந்தனர். இதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது. இதற்கு எதிராக சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் சோல்பரிப்பிரபு முன் வாதாடினார். இவரது கருத்துக்களே ஐம்பதுக்கு ஐம்பது என இன்று கூறப்படுகின்றது.
ஆனாலும் அவரது கருத்துக்களை சோல்பரிப் பிரபு தலைமையிலான குழுவினர் ஏற்கவில்லை. இனால் அவர் லண்டனுக்குச் சென்று பிரித்தானிய அரசுடன் பேசமுயன்றார். திரு ஜி.ஜி.பொன்னம்பலம் லண்டனில் இருக்கும் போதே இங்குள்ள தமிழின விரோதிகளான இராஜகுலேந்திரன், தியாகராசா, ஜெகநாதன் போன்றோர்களை ஆசைகாட்டி கைக்குள் போட்டுக்கொண்ட டி.எஸ்.சேனநாயக்கா மீண்டும் தந்திரோபாயமாக இலங்கையின் அனைத்து மக்கள் சார்பிலும் சோல்பரித் திட்டத்தை ஏற்க வைத்தார். தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர்.
1954 வல்வெட்டித்துறை மகாநாடு
இலங்கை கொம்யூனிஸ் கட்சியின் அடுத்த தேசிய மகாநாடு யாழ்ப்பாணக் குடாநாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகப்பட்டினமான வல்வெட்டித்துறையில் 1954ம் ஆண்டு இடம்பெற்றது. முன்னைய கொழும்பு மாநகரசபை முன்றலில் 1944ம் ஆண்டு முன்வைத்து மொழியப்பட்ட வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகக் கோட்பாடு அங்கும் ஏற்கப்பட்டது. தமிழர்களுக்கு அவர்களது பிரதேசங்களை விருத்திசெய்து கொள்ள சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது இந்த தேசிய மகாநாட்டில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். தமிழர் தாயக்கோட்பாடு ஏற்கப்பட்டது.
1956ம் ஆண்டு பொதுத்தேர்தல்
1956ம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று கூறப்படுகின்றது. அந்நிய முதலாளித்துவ கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து தேசிய முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய முன்னணியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. தமிழ்ப்பகுதிகளிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிடமிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைமையை பெற்றுக் கொண்டது. இத்தகையதொரு மாற்றம் ஏற்பட்ட அதேவேளையில் மொழிப்பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு 'சிங்களம் மட்டும்' கோரிக்கையை முன்வைத்தன. இரு வேறு தேசிய இனங்களுக்கும் ஒரு 'மொழிக்கொள்கை' வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்ட தீப்பொறியாகப் பற்றிப்படர்ந்தது.
வில்மட் பெரேராவின் முன்மாதிரி
1956 பொதுத் தோர்தலைத் தொடர்ந்து இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அது 1956ம் ஆண்டு அம்பாறை இங்கினியாகலையில் 150 தமிழர்களைக் கொன்று குவித்தது. 1958 மே மாதம் இறுதி வாரம் இலங்கை பூராவும் இனக்கலவரமாக வெடித்தமையால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் ஒரு சிங்களப் பெரியார் 1956ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்தரக் கட்சி சார்பாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் இந்த இனவாதத் தீயினுள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது விலகிநின்றார். தமிழ் மொழிக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும், தமிழ்ச் சகோதரர்களை அரவணைக்க வேண்டும், தமிழர்களது பிரதேசத்தில் அவர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று இடித்துரைத்தார். இறுதிவரை உறுதியாகவும் இருந்தார். இதிகாசத்தில் வரும் மகாபாரதக்கதையும் துரியோதனன் சபையில் நூற்றியொரு பேர் இருந்தார்களாம். அவர்கள் எல்லோரும் அநியாயம் செய்வதையே இலக்காக் கொண்டிருக்க ~விகர்ணன் மட்டும் நியாயத்தைச் சொன்னாராம். அதேபோல பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கப் பாராளுமன்றக் குழுவில் விகர்ணனாக வில்மட் பெரேரா விளங்கினார். நியாயத்தின்பால் நின்றார் தமிழர்தாயகக் கோட்பாட்டை முழுமனதுடன் ஆதரித்தார்.
1956 யூன் 5 சிங்களம் மட்டும் சட்டம்
பண்டாரநாயக்கா தான் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் ~சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவருவேன் எனக்கூறி ஆதரவு பெற்றே பிரதமரானார். அவர் பதவிக்கு வந்ததும் 1956 யூன் 5ம் திகதி (05.06.2006) சிங்களம் மட்டும் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இடது சாரிக்கட்சிகளும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் பலத்த எதிர்ப்பைக்காட்டின. ஆனாலும் பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றினார்.
இடதுசாரிகளின் கருத்துக்கள்.
1956ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் டாக்டர் என்.எம். பெரேரா தலைமையிலான இடது சாரிக்கட்சிகளே இலங்கைப் பாராளுமன்றத்தில்; பலமான கட்சிகளாக அமைந்தன. 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் 'சிங்களம் மட்டும்' சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அப்போது குரல் கொடுத்தவர் கொல்வின் ஆர்.டி.சில்வா. இந்த சட்டத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிச் சுருக்கமாகப் பின்வருமாறு சொன்னார்.
'ஒரு மொழி இருநாடுகள். இருமொழி ஒருநாடு'
அதாவது ஒரு மொழிக்கொள்கை நடைமுறையானால் இலங்கைத் தீவுக்குள் இன்னொரு நாடு உதய மாகும் என்றார். அங்கு கொல்வின் ஆர்.டி.சில்வா உருவாகப்போகும் தமிழீழத்தேசத்தின் தாயகத்தை ஏற்றே கருத்துரைத்தார். கலாநிதி என்.எம்.பெரேரா பேசும்போது பண்டாரநாயக்காவைப் பார்த்து தமிழ் மக்கள் மறந்து போன தாயகத்தை நீ அவர்களுக்கு நினைவூட்டுகின்றீர் என்றார்.
இதே பாராளுமன்றத்தில் சம்ளி குணவர்த்தனா பேசும் போது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தமது தாயகத்தை அடையும் போது செல்வாநாயகத்துக்கோ பொன்னம்பலத்துக்கோ சிலை வைக்கமாட்டார்கள். உமக்குத் தான் சிலை வைப்பார்கள்’ என கருத்துரைத்தார். தமிழர் தாயகக் கோட்பாடு இவராலும் ஏற்கப்பட்டது. இப்படியாக கம்யூனிஸ்கட்சி பிரமுகர்களாக கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன் போன்றோரும் பண்டாரநாயக்காவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி எடுத்துரைத்த போது தமிழர்களின் பூர்வீகத் தாயகக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டே உரையாற்றினார்கள்.
பின்னைய காலத்தில் விவியன் குணவர்த்தனா, சரத்முக்தட்டுவேகம போன்றோரும் தமிழர் தாயக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.
1958 கலவரமும் கப்பல்ப்பயணமும்
1956ம் ஆண்டு பொதுத்தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை 1958 பெரும் இனக்கலவரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து கடல் மார்க்கமாகவே பண்டாரநாயக்கா தமிழர்களை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்துக்கு அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்காகவென அனுப்பி வைத்தார்.
அப்போது அவரும் தமிழர் தாயக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார் இதற்கு முன்னர் 26.02.1957அன்று தந்தை செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்து கொண்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும் தமிழர் தாயகப்பகுதியில் அரச உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழர் தாயகப் பகுதியான வட கிழக்கு குடித்தொகைச் சமநிலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தமாட்டேன் என்று உறுதி கூறினார். அவரும் தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டே தந்தை செல்வாவுடன் உடன்பாடு கண்டார்.
1965ல் டட்லிசெல்வா உடன்படிக்கை
1965ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி தமிழர் தலைவன் தந்தை செல்வாவும் அப்போதைய சிங்களதேச பிரதமருமான டட்லி சேனாநாயக்காவும் செய்து கொண்ட புகழ்பெற்ற டட்லி - செல்வா உடன்படிக்கையின்படி தனது அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பில் பின்வரும் மூன்று விடயங்களை டட்லி சேனாநாயக்கா ஏற்றுக்கொண்டார். அவை பின்வருமாறு:-
அ.) வடக்குக்கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது வடக்குக் கிழக்கு மாகாணத்து தமிழ் மக்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும்.
ஆ.) அவ்வாறு முடிக்குரிய காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு இரண்டாவதாக முன்னுரிமை வழங்கப்படும்.
இ.) இதன் பின்னர்தான் ஏனைய மாவட்டத் தலைவர்களுக்கு முடிக்குரிய காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இதன்படி பார்த்தால் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் என்பதை டட்லி சேனநாயக்காவும் அவரது அரசும் ஏற்றுக் கொண்டனர் என்றே அர்த்தப்படுவதை யாரும் மறுக்கமுடியாது
1983ம் ஆண்டு இனக்கலவரம்
1957ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயாத்திரை போன கே.ஆர் தான் ஏன் கண்டிக்குப் போனேன் என்பதை விளக்கி 1966ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் 1957ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் தமிழர் தாயகத்தில் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் என்றும் வடக்குக் கிழக்கு ஒரே நிர்வாகப்பகுதியாக மாற்றப்படும் என்றும் பண்டா - செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்ட படியால்தான் பாதயாத்திரை போனதாக ஒரு கதையை அவிழ்த்து விட்டார்.
ஆனால் இதை கே.ஆர்காலத்தில் 1977,1979,1981,1983, ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கெதிராக மிகமோசமான இனக்கலவரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போது தென்னிலங்கையில் இருந்த தமிழர்களை எல்லாம் வடக்குக் கிழக்குக்கு ஜே.ஆர் கடல்மார்க்கமாகவே அனுப்பி வைத்தார். இக்கலவரங்களின் போது லங்காராணி, லங்காமுடித்த போன்ற கப்பல்களோடு இந்தியக்கப்பல்களான சிதம்பரமும் சேவையில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1987 ஜே.ஆர்.ராஜீவ் ஒப்பந்தம்
1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டம் வீறுபெற்று புத்தெழுச்சியுடன் கூர்மை பெற்று முகப்புடையதாயிற்று. ஜே.ஆர்ஜேவர்த்தனாவின் அரசு இனப்படு கொலையைத் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டது. இதனால் 1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் திகதி (29.07.1987) அப்போதைய சனாதிபதி ஜே.ஆர் முன்னால் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒருவாசகம் பின்வருமாறு கூறுகின்றது.
~வடக்கும் கிழக்கும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்பதேயாகும். இதன்படி ஜே.ஆர் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் வடக்கும் கிழக்கும்தான் என்பதை ஏற்றுக் கொண்டே 1987 ஆடி 29ம் திகதி இந்தியப் பிரதமருக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டார்.
எட்மன் சமரக்கொடி முதல் இன்றுவரை
தமிழ் மக்களுடைய உரிமைக்காக ஆரம்ப காலத்தில் குரல்கொடுத்த பாரம்பரிய இடதுசாரிகள் இடையில் இனவாதத்துக்குப் பணிந்து கொண்டாலும் ஆரம்பம் முதல் தான் இறக்கும் வரை தலைநிமிர்த்தி தமிழர்களுக்காகவும் அவர்களது சுயாட்சிக்காகவும் குரல்கொடுத்து இன்னுமொரு சிங்களத் தலைவர் எட்மன் சமரக்கொடி ஆவார்.

இறுதிவரை போராடிய தமிழ் அரசர்கள்

கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றுடன் 192 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கைத் தீவில் தனியரசுகளாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் கைப்பற்றினர். அந்நியருக்கெதிராக இறுதிவரை போரிட்டு மாண்டவன் யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியன் என்பது வரலாறு.

சுயலாபம் கிட்டும் என்ற ஆசையால் காக்கை வன்னியன் என்ற தமிழனே சங்கிலியனைப் போர்த்துக்கேயர் தோற்கடிக்கக் காரணமாயமைந்தான் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதிவரை அந்நியரை எதிர்த்து நின்ற பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அரசனுக்கு உண்டு.

அதேபோன்று, வன்னித் தமிழரசரும் அந்நியருக்கெதிராக போராடிய வீர வரலாறு கொண்டவர்கள். சிற்றரசாக இருந்த போதும் போர்த்துக்கேயராகவோ, ஒல்லாந்தராகவோ வெற்றி கொள்ளப்படாத பெருமை கொண்டது வன்னித் தமிழ் அரசு. இறுதியில், ஆங்கிலேயருடன் நடைபெற்ற போரில் வன்னியரசு முறியடிக்கப்பட்டது வரலாறு.

தமிழ் அரசுகள் அந்நியருக்கெதிராகப் போராடியபோது கோட்டை இராச்சியத்தை ஆண்ட சிங்கள அரசர்கள் போர்த்துக் கேயரை வரவேற்றதுடன் மட்டுமல்ல, தமது இராச்சியத்தையே அவர்களுக்குத் தாரை வார்த்தமை வரலாற்றுப் பதிவாகும்.

இவ்வாறு இலங்கையின் கரையோர இராச்சியங்கள் அந்நியராட்சிக்கு உட்பட்ட போதும் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியம் சுதந்திரமாக விளங்கியது. கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தை ஆங்கிலேயர் பறித்தார்கள் என்பது வரலாற்று நிகழ்வு.

கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தைப் பறித்து அந்த சுதந்திர இராச்சியத்தை ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்தியதில் பெரும் பங்கு சிங்களப் பிரதானிகளையே சாரும்.

கண்டியை ஆட்சி செய்த அரச பரம்பரை நாயக்கர்கள் தமிழர்களாக இருந்தமையால் இன வெறியுடன் செயற்பட்ட சிங்களப் பிரதானிகள் சொந்த நாட்டையே அந்நியரிடம் அடிபணியச் செய்யக் காரணிகளாகினர்.
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாகட்டும் என்றபடி சிந்தித்த சிங்களப் பிரதானிகள் நாட்டை காட்டிக் கொடுத்த தேசத் துரோகிகளாகவே வரலாற்றில் பதியப்படும் தகைமை பெற்றவர்கள்.
கண்ணுச்சாமி என்ற தமிழ் இளவரசனே ஷ்ரீ விக்கிரமராஜ சிங்கன் என்ற இறுதிக் கண்டி அரசனாக விளங்கினான். இறுதிவரை ஆங்கிலேயருக்கெதிராகப் போரிட்டு சிங்களப் பிரதானிகளின் துரோகத் தனத்தால் பிடிபட்டு தென்னிந்தியாவிலுள்ள வேலூருக்கு கண்டி அரசன் நாடு கடத்தப்பட்டான். இனவெறியுடன் செயற்பட்ட, இறுதியில் சிங்கள இராச்சியமென்று மார்தட்டிக் கொள்ளும் கண்டி இராச்சியத்தை அந்நியருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பெருமை சிங்கள பிரதானிகளையே சாரும்
.

1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி ஷ்ரீ விக்கிரமசிங்கன் என்ற கண்டி இராச்சியத்தின் அரசன் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டான். கண்டி இராச்சியம் அன்றுடன் அழிந்தது. இலங்கைத் தீவு முழுவதும் அந்நியர் வசமானது.

இலங்கை வரலாற்றில் காக்கை வன்னியன் என்ற ஒரு தமிழனைத் தவிர, வேறு எந்தவொரு தமிழனும் சொந்த நாட்டின் துரோகியாக வரலாற்றில் பதிவாகி இல்லை.

ஆனால், கோட்டை இராச்சிய சிங்கள அரசனும், கண்டி இராச்சியத்தின் சிங்கள பிரதானிகளும் நாட்டைக் காட்டிக் கொடுத்து அந்நியருக்கு அடிமைப்படுத்திய பட்டியலில் நீண்டு செல்கின்றனர்.

இலங்கையின் தேசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியோர் வரிசையில் யாழ்ப்பாணத்து தமிழ் அரசன் சங்கிலியனும், வன்னியின் தமிழரசன் பண்டாரவன்னியனும் கண்டியின் தமிழ் அரசன் ஷ்ரீ விக்கிரமராஜசிங்கனும் ஆவர்.

சுதந்திரத்தைப் பறிப்பதை எதிர்த்து இறுதிவரை போராடிய தமிழ் அரசர்களை நாடு மறந்து விட்டது. நாமும் மறந்து விடக் கூடாது. சுதந்திரத்தின் அர்த்தம் புரியாது சுதந்திர வீரர்களாக உலா வருவோர் ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடியவர்களை மறந்து அல்லது மறைத்து விடுவது வரலாற்றுக் களங்கமாகவே அமைந்து விடுகின்றது.

மார்ச் மாதம் 02 ஆம் திகதி இலங்கையின் துரோக வரலாற்றில் நினைவு நாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகும்